JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

Friday, October 10, 2014

காங்கிரஸ் நூல் நிலையத்தில் தோமஸ் ஜெபர்சனின் குர்ஆன்


Kalmunai Muharram

ஜக்கிய அமேரிக்காவின் ஸ்தாபகத் தந்தையருள் ஒருவரும் 1776 சுதந்திர பிரகடனத்தின் பிரதம ஆசிரியருமான தோமஸ் ஜெபர்சன் 1801 இலிருந்து 1809 வரை இளம் அமேரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.ஜெபர்சன் குர்ஆன் வாங்கிய கதையானது இவ்விடயத்தை விளங்கப்படுத்துகின்றது.

வேர்ஜீனியாவின் அறிக்கையைப் புரட்டிப்பார்க்கும் போது பிராங்டிவே என்ற அறிஞர் ஜெபர்சன் 1765களில் வேர்ஜீனியாவின் வில்லியம் அன்ட்மேரி சட்டக்கல்லூரியில் மாணவனாக இருக்கும்போது குர்ஆனின் பிரதியை வாங்கினார். எனக் கண்டுபிடித்தார்.

பார்பரியின் பயமுறுத்தல் காரணமாகத்தான் ஜபர்சன் இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்டார்.எனத்தவறாக நிரூபிக்கப்பட்டது.மாறாக அவரது சட்டக்கல்வியின் அமைப்பு முறையே அவரை குர்ஆனின் பால் நேசம் கொள்ளச் செய்தது.

குர்ஆனிலுள்ள சட்டவியங்கள் சம்பந்தமாக ஜெபர்சனின் ஆர்வத்திற்குக் காரணமில்லாமலில்லை.சமயச்சட்ட ஷரீஆவின் முழு இஸ்லாமிய நீதித்துறை முறைகளும் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டவை.

அவரின் காலத்தில் இருந்த ஒப்பிட்டு சட்டவியலின் காத்திரமான நூலானது.ஜெர்மன் அறிஞர் சாமுவேல் வொன்பவன்டோப் என்பவர் எழுதிய “Law of Nature and Nations” என்ற நூலாகும்.அது முதன் முதலில் 1672இல் பிரசுரிக்கப்பட்டது.

ஜெபர்சன் பவன்டோப் எழுதிய நூலை ஆழமாக வாசித்தார்.ஏனைய நூல்களை விட இந்நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அவர் சட்டங்களை எழுதினார்.பவன்டோப் என்பவரின் நூலில் இஸ்லாம்,குர்ஆன் சம்பந்தமாக ஏராளமான விக்கங்கள் உள்ளன.
நல்லொழுக்க முறைகளை மேம்படுத்துதல்,போரில் ஈடுபடும் நாடுகளுக்கிடையே சமாதானத்தை ஏட்படுத்துதல் போன்றவைகளில் குர்ஆனிலுள்ள உதாரணங்களை மேற்கோள்காட்டி எடுத்து கூறினார்.

கேவின் வெய்ஸ் என்ற இன்னுமொரு அறிஞர் பின்வருமாறு எழுதுகின்றார் அவர் தனது சட்டக்கல்வியை இயன்ற அளவு விருத்தியாக்குவதற்குக் குர்ஆன் ஒரு சிறந்த பொக்கிஷம் எனக் கண்ட கொண்டார்.

குர்ஆனைச் சட்ட நூலாக அவர்படிப்பதற்கு ஒர் ஆங்கில மொழிபெயர்ப்பு அவருக்கு மிகவும் உதவியது.இது முன்னர் காணப்பட்ட மொழிபெயர்ப்புக்களை விடவும் சிறப்பானது மட்டுமல்ல உணர்ச்சி புர்வமானதாக காணப்பட்டது.
அது ஜொர்ஜ் சாலே என்ற ஆங்கில அறிஞர் ஒருவரால் தயாரிக்ப்பட்டு 1734இல் லண்டனில் பிரசுரிக்கப்பட்டது.

Description: http://winmani.files.wordpress.com/2011/08/distance.jpg?w=450&h=435
The kuran என்ற தலைப்பானது   “Al Coran of muhammed”எனப் பொதுவாக அழைக்கப்பட்டது.அதன் 2வது பதிப்பு 1764 பதிக்கப்பட்டது. இந்தப்பதிப்பையே ஜெபர்சன் வாங்கினார். ஜொர்ஜ் சாலே ஒரு வழக்கறிஞராக திகழ்ந்தார்.அவர் பின்வருமாறு கூறிப்பிடுகின்றார் அந்நிய தேசங்களில் சமய,சமூக ஸ்தானங்கள் பெறுமதிமிக்கதாக ஆக வேண்டுமானால் அரேபியர்களுக்கு சட்டத்தை கற்றுக் கொடுத்தவரும் ஒரு நூற்றாண்டுக்குள்ளே இஸ்லாம் உலகின் பெறும் பகுதிகளுக்கு பரவுவதற்கு காரணமாக இருந்தவருமான முஹம்மத் என்பவரின் அறிவுகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பவன்டொப் என்பாரைப் போலே ஜொர்ச் சாலே என்பவரும் பின்வருமாறு கூறுகிக்றார் முஹம்மத் என்பவர் சட்டத்தை வழங்குபவராக காணப்படுகின்றார். குர்ஆன் சிறந்த சட்ட வழிமுறைகளைக் காட்டுவதற்கும் உள்ளது.


ஜொரச் சாலேயின் மொழிபெயர்ப்பைக் கொண்ட குர்ஆனில் இன்னும் 150 வருடங்களுக்கு மேலாகவும் நிலைத்திருக்கக்கூடிய அதிசிறந்த ஆங்கில வாக்கியங்கள் காணப்படுகின்றன.இன்று காங்கிரஸ் நூல் நிலையத்தில் ஜெபர்சானின் குர்ஆனின் மூலப்பிரதியுடன் ஏறத்தாள ஒரு மில்லியன் இஸ்லாம் சம்பந்தமான பிரசுரங்கள் காணப்படுகின்றன.புதிய சட்ட வல்லுனர்கள்,மக்கள் போன்றோரின் தலைமறையினருக்கு அறிவை வழங்கும் பொக்கிஷங்களே இவைகள்.

YM
(Muslim Family Magazine)

0 comments:

Post a Comment