JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

Tuesday, October 14, 2014

அண்ணல் நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)அவர்களின் அழகிய உவமைகள் 02

நல்ல நண்பன்
ABu Izza Eravur

கஸ்துரி வியாபாரியை போன்றவன்...
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நல்ல நண்பன் நறுமண பொருட்களை விற்கும் ஒரு வியாபாரியை போன்றவன். அவன் நமக்கு எதையும் தரவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அவன் கடையில் உள்ள சிறந்த வாசனையாவது நம்மை வந்தடையும். தீய நண்பன், கொல்லனின் (இரும்பு வியாபாரியின்) சூளையை போன்றவன். நாம் அதன் நெருப்பிலிருந்து தப்பித்து கொண்டாலும், குறைந்தபட்சம் அதன் புகை நம் உடலையும், உடமையையும் அலங்கோலப்படுத்தி விடும். - (அபு மூசா (ரலி), புஹாரி, முஸ்லிம். 
நபி தோழர்: நல்ல நண்பனையும் - தீய நண்பனையும் நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?
நபி(ஸல்): நீங்கள் இறைவனை மறந்திருக்கும் போது உங்களுக்கு இறை நினைவூட்டுபவன் நல்ல நண்பன். அவ்வாறு உங்களுக்கு நினைவூட்டாதவன் தீய நண்பன். மேலும் யாரை கண்டவுடன் உங்களுக்கு இறைநினைவு வருகிறதோ அவர் மனிதர்களில் சிறந்தவர். 
மனிதன் தன் வாழ்வுக்கான முன்னேற்ற பாதையில் புதிய நட்புறவுகளை உருவாக்கி கொள்வதை இஸ்லாம் தடை ஏதும் செய்யவில்லை. அவ்வாறு உருவாக்கி கொள்ளும் மனோபாவம் இல்லாத தனிமை விரும்பியை உலகம் தனிமைபடுத்திவிடும்  என்பதை இஸ்லாம் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது. 
பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை என்பது போல, மனிதனுக்கு நட்பு மிக அவசியமானது. அந்த நட்புக்கு இஸ்லாம் சில வரை முறைகளை வலியுறுத்துகிறது.

உறவுகளை இறைவன் நமக்கு நேரடியாக வழங்குகிறான். ஆனால் நண்பர்களை தேர்வு செய்யும் உரிமையை நம்மிடம் தான் வழங்கியுள்ளான் என்பது சிந்திக்கத்தக்கது. 
நட்புக்கள் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் மிகபெரிய தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியது. "மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தில் இருக்கிறான்" என்பது நபிமொழி (-அபு தாவூத்).
ஒன்றுபட்ட நற்பண்புகளை போலவே, பல வேளைகளில் ஒன்றுபட்ட தீய பண்புகளும் நட்புக்கு தூண்டுகோலாய் அமைகின்றன. நல்ல பழக்கவழக்கங்களை விட தீய பழக்கவழக்கங்களே விரைவில் ஒருவனிடமிருந்து இன்னொருவனிடம் தொற்றிக்கொள்ளும். இதை நாம் நடைமுறையில் காணமுடிகிறது. 
இது போன்ற கொடிய பாதிப்புக்களை மனதில் கொண்டே உம்மி நபி(ஸல்) அவர்கள் மேற்கண்ட உவமானத்தை நமக்கு கூறியுள்ளார்கள்.
(ABu Izza Eravur)

0 comments:

Post a Comment