JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

JMH KALMUNAI

Monday, November 24, 2014

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

 ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கல்லூரி மாணவர்களும்  உஸ்தாதுமார்களும் வகுப்பறைகளில் 2014

அதிபர்   சங்கைக்குரிய மௌலவீ  அல் ஹாபிழ் அல் ஹாஜ் ஐ.எல் காதிர் மீராஷாஹிப் (நூரி) சம்பாந்துரை இலங்கை
  1. சங்கைக்குரிய மௌலவீ  எம். அன்வர்  பாசில்தகாபி மன்பயி
  2. சங்கைக்குரிய மௌலவீ   எம் முஸாதிக் அஸ்ஹரி பலாஹி
  3. சங்கைக்குரிய மௌலவீ  அல் ஹாபிழ் ஜெ.ஏ.எம் வலீத் கௌதி
  4. சங்கைக்குரிய மௌலவீ  எச்.எம்.எம் யுசுப் முஸ்தபீ
  5. சங்கைக்குரிய மௌலவீ  அல்ஹாபிழ்  எம்.றியாஸ் அல்தாபீ
  6. சங்கைக்குரிய மௌலவீ எம்.அப்துர் றஹீம் நுழாரீ
சங்கைக்குரிய மௌலவீ

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka

jamia manbail Hidaya Arabic College kalmunai Srilanka


Sunday, November 9, 2014

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

நோய் குணப்படும் மருத்துவக்கலை ஒரிரவில் உருவாக்கப்படவில்லை.அது ஆயிரம் ஆயிரம் பங்களிப்பாளர்களின் முயற்ச்சியின் விளைவாக உருவான உச்ச அடைவு மட்டமாகும். இம் முயற்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே  ஆரம்பமாகிவிட்டன.இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலை முறைக்கும் ஒரு நாகரிகத்திலிருந்த இன்னுமென்றுக்கும் கையளிக்கப்பட்டது.

இஸ்லாத்திற்கு முன்பிருந்தே வைத்திய முறை நடை முறையிலிருந்தது. மருத்துவத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஹிப்போக்கிரட்ஸ் போன்றவர்களால் மகத்தான பங்களிப்பாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவரின் பெயர் பரவலாகப் பிரபல்யமான சத்தியப்பிரமாணம் என்ற ஆவணத்துடன் தொடர்புபட்டிருந்து.அவரின் “அல்கமியோன் “என்ற நூல் கிரோக்க இலக்கியத்தின் ஆரம்பகர்த்தாவாக இருக்கக்கூடும்.

மூளைக்கும் புலன் அங்கங்களுக்கு மிடையேயுள்ள தொடர்புகளை விருத்தியாக்குதல் என்பதே அவரின் காத்திரமான பங்களிப்பாகும்.மனதின் அங்கமே மூளை,அது உணர்ச்சிகளை அறிவதற்கு மட்டுமல்லாமல்,
சிந்தனை,ஞாபகசக்தி என்பவற்றிக்குப் பொறுப்பானதாகும் உள்ளது. 

வரலாற்றில் அதிஉயர் விஞ்ஞானி,தத்துவஞானியாகக் கருதப்பட்ட அரிஸ் டொட்டில்,அல்கமியோன், உடன்பாடக் காணப்படவில்லை.அவர் உணர்ச்சிகளின் மையப்பகுதி மூளை அல்ல. இதயமே என நம்பினர்.

கி.பி 711 இல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்கு 80 வருடங்களின் பின்னர் முஸ்லிம்கள் ஜரோப்பாவை ஊடறுத்து ஸ்பெயின் அன்டலூசியாவை ஆட்சி புரிந்தனர். 

அங்கு அவர்கள்  700 வருடங்ககுக்கு மேலாகத் தங்கியிருந்தனர்.இஸ்லாமியப் பேரரசு மேற்கில் அத்திலாந்திக் சமூகத்திருந்து கிழக்கில் சீனாவின் எல்லை வரை வியாபித்திருந்தது. இஸ்லாத்தின் போதனைகள்,கற்றலின் முக்கியத்துவம், அழிவுகளைத்தடுத்தல்,தனியாள் சுகாதாரம்,சுத்தம் என்பவற்றை உக்கப்படுத்துதல் ஒழுக்கத்தைக் கண்ணியப்படுத்துதல் ஏனைய மதங்களுடனான தாராள மனப்பான்மை போன்ற விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

இஸ்லாமிய விஞ்ஞானமானது ஆரம்பித்ததிலிருந்தே பௌதிக சூழலை மட்டும் அடிப்படையாகக் கருதவில்லை.மாறாக தான் வாழும் சமூகத்தில் ஓர் ஆத்மீக வாதியாக மனிதனை கருதுகிறது.

முதலாம் நிலை
7ஆம் 9ஆம் நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள முதல் நிலை
இது அந்நிய நூற்றாண்டுகளுக்கிடையேயுள்ள அரபியில் மொழி பெயர்க்கும் காலம்.முஸ்லிம் விஞ்ஞானிகள் பொதுவாகச் சிறப்பான நூல்களை பாதுகாத்து வைப்பதில் ஆர்வமுடையவர்களாகக்காணப்படுகின்றனர்.

இரண்டாம் நிலை
9 ஆம் 13 ஆம் நிலை நூற்றாண்டுகளுக்கிடையேயான இரண்டாம் நிலைமை. .இது முதலாவது நிலையில் பெற்றுக்கொண்டவற்றை கட்டியெழுப்பும் நிலை மருத்துவத்தில் புதிய அத்தியாயங்களை தோற்றுவித்த முன்னணித் தலைவர்களாகிய முஸ்லிம் மருத்துவர்களின் நேர்மையானதும் சிறப்பானதுமான பங்களிப்பைக்காட்டும் நிலை.இது ஐரோப்பாவிற்கும் உலகின் ஏனைய நாடுகளு்கும் அறிவை வழங்கிய காலம்

மூன்றாம் நிலை
13 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய நிலை - மருத்துவமும் ஏனைய விஞ்ஞானத்தின் கிளைகளும் பின் தங்கியதும் மந்தமானதுமான நிலை.இதுதான் மேற்குலகின் கை ஒங்கிய நிலை.

தொடரும்............

(By:அபு இஸ்ஸா )

விஞ்ஞானத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு


Monday, November 3, 2014

விஷேட மார்க்க சொற்பொழிவு

இமாம் ஸெய்யிதுஷ் ஷூஹதா ஸெய்யிதுனா ஹூஸைன் ரழியல்லாஹூ அன்ஹூ அன்னவர்களின் மனாகிப் மஜ்லிசும் விஷேட மார்க்க சொற்பொழிவும்

இடம்  - புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி
காலம் – 04-11-2014 செய்வாய்க் கிழமை
நேரம் – காலை 10 மணி
தலைப்பு – பெருமானாரும் பேரர் ஹூஸைனின் பெறுமையும்
வளவாளர் – சங்கைக்குரிய மௌலவி அல் ஹாஜ் இப்றாஹீம் அஹ்மத் அஸீஸி ரப்பானி

அதிபர் அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி புத்தளம்

விஷேட மார்க்க சொற்பொழிவு


இமாமுனா ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

இன்று 03-11-2014 இஷாஃ தொழுகையின் பின் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கலாசாலையில் புனித முஹர்றம் ஆஷூரா தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஜாமிஆவில் இருக்கும் மனாருல் ஹூதா பள்ளிவாயலில் புனித ஹஸன் ஹூஸைன் மெளலீத் ஓதப்பட்டு விஷேட துஆ பிரார்தனையும் சிறப்பாக நடை பெற்றது.இந் நிகழ்வில் மாணவர்களும் உஸ்தாதுமார்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.



ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்

ஹஸன் ஹுஸைன் றழியல்லாஹூ அன்ஹூமா மனாகிப் மஜ்லிஸ்






Friday, October 31, 2014

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

‘ஸம் ஸம்’ தண்ணீரின் பிறிதொரு அற்புதம்தான் தாகத்தையும் பசியையும் போக்கக்கூடிய திருப்திகரமான இயலுமையாகும். நபி (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கூறினார். “இஸ்லாத்துக்கு முன்னர் இந்தத் தண்ணீர் சப்பாஹ் அளிப்பது திருப்திகரமானது” என அழைக்கப்பட்டது என்று.


அது அவருடைய குடும்பத்தைப் போஷித்து வளர்க்க உள்Zடாகவும் உதவியாகவும் அமைந்திருந்தது. இஸ்லாத்துக்குப் பின்னர் இந்தப் பலம் பொருந்திய நீர் தாகத்தைத் தணியச் செய்து வயிற்றை நிரம்பச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “பூமியிலுள்ள மிகச் சிறந்த தண்ணீர் ஸம் ஸம் நீராகும். அது ஒருவகையான உணவாகவும் நோய் நிவாரணியாகவும் அமைந்துள்ளது என்று.

முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிற்கேற்ப, அபூதர் அலி கிப்பாரீ (தோழர் சஹாபீ) குறிப்பிட்டதாவது, தான் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவுக்கு வந்தபோது ஒரு மாதம் பூராவும் ஸம் ஸம் நீர் அருந்தி தாகம் தீர்த்தது மாத்திரமன்றி, அந்த ஸம் ஸம் நீரால் தான் வாழ்ந்ததாகவும் அறிவித்துள்ளார்கள். மிக அண்மைக் காலமாகிய கடைசி ஒரு சில தசாப்தங்களில் விஞ்ஞானிகள் ஸம் ஸம் தண்ணீரின் சில மாதிரிகளை ஒன்று சேர்த்து அதில் அதிகமான கல்சியம் உள்ளதென்றும் அது சிறப்புத் தன்மையுள்ள ஆரோக்கியமான தண்ணீர் என்றும் கண்டுபிடித்தனர். இரண்டு அற்புதங்கள் உண்டு.

ஸம் ஸம் நீர் உடனடியாக மீள் நிரப்பப்படுவதும் அல்லாஹ் நிகரில்லாத ஸம் ஸம் கிணற்றுக்கு மேலதிகமாகக் கொண்டு வந்து ஊற்றாததும் அன்றி உலகமே அதில் மூழ்காததுமாகும். ஸம் ஸம் என்பதன் மொழிபெயர்ப்பு (ஹாஜரா (அலை) அவர்களால்) நில்! நில்! என்பதே அதன் பொருளாகும்.
பாணந்துறை
http://thinakaran.lk/2014/09/26/?fn=r1409262
செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு

செக்கனுக்கு 8000 லீற்றர் வழங்கும் ஸம் ஸம் கிணறு
Add caption

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice Bucaille ன் உறுதியான கருத்தும்.

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் Prof:Maurice

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே

என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லைஎன்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வுஎனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான்
அல்ஹம்து லில்லாஹ்...


(Abus Izza Evr)

Thursday, October 30, 2014

உலகின் நறுமணமிக்க மலர்கள்


உலகின் நறுமணமிக்க மலர்கள்

இல்லாதிருந்த இப்பிரபஞ்சங்களையும் பஞ்சபூதங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ் அவற்றையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் படைக்க ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான். அத்தகு சர்வ வல்லமையும் கொண்ட அல்லாஹ் மாதங்கள் தொடர்பில் பின்வருமாறு கூறுகின்றான். வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி அம்மாதங்களில் நீங்கள் தங்களுக்கு தீங்கிழைத்து விடாதீர்கள். அல்குர்ஆன் 9:36

நபி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில், வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவையாகும் என்றுரைத்திருக்கிறார்கள் புகாரி.

ஆங்கில மற்றும் அரபு மாதங்கள் பன்னிரெண்டாக இருக்கிறது. சூரிய ஓட்டத்தைக் கணித்து ஆங்கில மாதங்களும் சந்திர ஓட்டத்தினைக் கணித்து அறபு மாதங்களும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மனிதன் தற்பொழுது கண்டுபிடித்திருக்கின்றான். இது மனிதனின் ஏற்பாடல்ல என்பதையும் மனிதன் ஏற்றிருக்கின்றான். ஆனால் வானங்கள் பூமிகளையும் மாதங்களின் எண்ணிக்கை உட்பட அனைத்தையும் படைத்தவன் நான் அன்றி வேறில்லை என வாதிடும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொண்டு அவன் ஒருவனையே வணங்குவதற்குப் பதிலாக இப்பிரபஞ்சங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றதென்ற ஆய்வில் மனிதன் காலத்தையும் நேரத்தையும் கழித்துக் கொண்டிருக்கின்றான்.

சந்திர ஓட்டத்தில் சுழன்று மலரும் சன்மார்க்க மாதங்களின் முதல்வன் முஹர்ரத்தினை அல்லாஹ்வின் பேருதவியினால் இம்முறையும் வரவேற்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம் துலில்லாஹ் நபிலான நோன்புகளை எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நோற்றுக் கொள்ள முடியும். என்றாலும் அல்லாஹ்வின் மாதம் என்றழைக்கப்படும் புனித முஹர்ரம் மாத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு நோற்பதற்கு தனிச் சிறப்பிருக்கிறது. ரமழானுக்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு வைப்பதை சிறந்ததென்று நபியுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் இம்மாதத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள். 

எனவே இஸ்லாமியர்களான நாம் ஒன்பதாவது நாளையும் சேர்த்து நோன்பு நோற்பது ஸ¤ன்னத்தான கருமமாக இருக்கிறது. அதனடிப்படையில் எதிர்வரும் 3,4 ம் திகதிகளில் இவ்வருட முஹர்ரம் மாத பிறை 09,10 க்குரிய ஸ¤ன்னத்தான நோன்புகளை நோற்பதற்கு அல்லாஹ் தெளபீக் செய்வானாக! இத்தினங்கள் மறவாது நினைவு கூரப்பட வேண்டும் என்பதற்கு இவை போதிய சான்றுகளாக இருக்கிறது.

ஆஷ¥ரா என்னும் சொல் ஹிப்ர் மொழிச் சொல்லாகும். அதாவது பத்தாவது நாள் என்பது அதன் அர்த்தமாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் திஷ்ரி மாதமும் அரபிகளின் முஹர்ரம் மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாக இருக்கிறது. அதற்காக இஸ்லாமியர்கள் யூத முங்லிம்கள் என்று அழைப்பதில்லை. அத்துடன் புனித முஹர்ரம் மாதத்தில் பேசப்படுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளில் ஹழ்ரத் ஸெய்யிதுனா ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் தியாக நிகழ்வும் ஒன்றாக வரலாற்றில் பதிவேறியிருக்கிறது.
ஒரு தடவை உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் இல்லத்திலிருந்து புறப்பட்டு அருமை மகளார் பெண்கள் தலைவி ஸெய்யிததுனா ஃபாத்திமா அலைஹஸ்ஸலாம் அவர்களின் வீட்டை நோக்கி அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் சென்று கொண்டிருந்த போது ஹழ்ரத் ஹுஸைன் ரழையல்லாஹு அன்ஹு அவர்கள் அழும் ஓசையைக் கேட்டார்கள். அப்பொழுது அவர் அழுவது எனக்கு துன்பமளிக்கிறது என்பதை அறியமாட்டீரா என வினவினார்கள் தபரானி.
இன்னுமொரு தடவை தாகத்தினால் அழுது கொண்டிருந்த பேரப் பிள்ளை களின் தாகம் தீர்ப்பதற்காக தனது முபாரக்கான நாவினை அவ்விருவரின் வாயில் வைத்து உறிஞ்சக்கொடுத்து அழுகையை நிறுத்தினார்கள். தபரானீ, மஜ்மஉஸ் ஸவாயித். தன் பேரப் பிள்ளைகள் சாதாரணமாக அழுவதைக் கூட பெருமானார் விரும்பவில்லை யென்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. அன்னை ஃபாத்திமாவின் பேச்சும் நடையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் பேச்சுக்கும் நடைக்கும் நிகராகத் திகழ்ந்ததுபோன்று இரு பேரர்களின் உருவ அமைப்பு பெருமானாரின் பரிசுத்த தோற்றம் போன்றிருந்திருக்கிறது. தன்னை நேசிப்பவர்கள் இவ்விருவரையும் நேசித்தாகவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். பெருமானாரின் பரிசுத்த மேனியில் உருண்டு பிரண்டு விளையாடும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். சுவனபதி வாலிபத் தலைவர், உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள் என நபியவர்களால் போற்றிப் புகழப்பட்டவர்கள்.

அருமை நாயகம் முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் தனது இரு பேரக் குழந்தைளையும் அதிகமதிகம் நேசித்திருக்கிறார்கள். அத்தோடு அவ்விருவரையும் நேசிக்குமாறு பிறர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அவ்விருவரையும் நேசிப்பவர்களை தானும் நேசிப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள். அவ்விருவரை மட்டுமன்றி அவர்களது பெற்றோர்களையும் நேசிக்கும் விடயத்தில் தீனுல் இஸ்லாம் கூடிய கவனம் செலுத்தியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே பரிசுத்த இக்குடும்பத்தினரை இஸ்லாம் கூறும் விதத்தில் நேசிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அருமை நாயகம் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான ஹழ்ரத் ஸெய்யிதுஷ் ஷ¤ஹதா இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை அல்லது அன்னவரின் குடும்பத்தினரை நேசிப்பது ஈமானிய அம்ஷம் எனக்கூறிக் கொண்டு ஏனைய எந்தவொரு நபித் தோழரையோ அல்லது அண்ணலாரின் குடும்ப அங்கத்தவர்களான மனைவிமார்களையோ தூற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அண்ணலாரின் அருமைத் தோழர்க ளைக் குறைகூற விமர்சிக்க மார்க்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானவர்களுக்கு அல்லாஹ்வும் அவனது அமரர்களும் சாமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிரெண்டு மாதங்களில் துல் கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்கள் வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து அல்லாஹ்விடம் சங்கைமிக்கதாக ஏற்படுத்தப்பட்டதற்கு இதுதான் காரணம் என்றுகூற மனிதனுக்கு ஆற்றல் இல்லையென்ற போதிலும் அல்லாஹ்வின் தீர்க்கதரிசிகளான நபிமார்கள் ரசூல்மார்கள் அவ்வாறே விலாயத்தின் தலை வாசலான வலிமார்கள் இச்சிறப்பான மாதங்களில் நினைவுகூரப்படுவதுடன் அவ்வாறானவர்களின் விரோதிகளான அல்லாஹ்வின் விரோதிகள் தூற்றப்படுவதையும் காண முடிகிறது.

துல்கஃதா துல் ஹிஜ்ஜா மாதங்களில் நபிமார்களான இப்ராஹீம், இஸ்மாயில், ஹாஜா அலைஹிமுஸ்ஸலாம் நினைவு கூறப்பட்டு அவர்கள் போற்றிப் புகழப்படுவதுடன் நிம்ரூத் எனும் கொடிய அரக்கன் சாமிடப்படுவதையும் பார்க்கின்றோம் அவ்வாறே இங்லாமிய புது வருட முஹர்ரம் மாதத்தில் நபியுல்லாஹ் மூசா அலைஹிஸ்ஸலாம் நினைவு கூரப்படுவதுடன் கொடிய அரக்கன், பிர்அவ்ன் சாமிடப்படுகின்றான். அத்துடன் விலாயத்தின் தலை வாயிலான அஹ்லு பைத்துக்களும் நினைவு கூரப்பட்டு அதன் எதிரிகள் தீக்கிரையாக்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே நபிமார்கள் ரசூல்மார்கள் வலிமார்களுடன் தொடர்புடைய கால நேரங்கள் உலகம் அழியும் வரை மனிதன் வணக்க வழிபாடுகள் வாயிலாக இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் மீறப்படாத அமைப்பில் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கின்றான்.
அபுத் தூபா ஏறாவூர்
அல் ஜாமி அத்துல் அkஸிய்யா அரபுக் கல்லூரி
விருதோடை


ahlul baith  Rasoolullah_

விஷேட துஆப் பிரார்த்தனை


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா அரபுக்கல்லூரியில் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் மௌலவீ இப்றாஹீம் அஹ்மத் அல் அஸீஸி அர்ரப்பானி அவர்களின் தலைமயில் நாட்டின் சுபீட்சத்துக்காகவும்இன ஐக்கியத்துக்காகவும் விஷேடமாக பதுளை மீரியபெத்த பிரதேசத்தில் இடம் பெற்ற பாரிய மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களுக்காகவும் குடும்பங்களை உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருப்பவர்களுக்காகவும் 29-10-2014 வியாளக்கிழமை மாலை கல்லூரி கான்னாஹ்வில் இடம் பெற்றது.இதில் கல்லூரி அதிபர்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள் சகலரும் கலந்து சிறப்பித்தனர். (IN:Abuthooba Evr)


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா


புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

புத்தளம் விருதோடை அல் ஜாமிஅத்துல் அஸீஸிய்யா

Wednesday, October 29, 2014

உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஒரு வழக்குத் தீர்ப்பு

உமர் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் ஒரு வழக்குத் தீர்ப்பு
இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் (ரலி) யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்... அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்... "யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்... உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார். அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்... அபு தரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்... தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்... இரண்டு நாட்கள் ஓடியது. மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது. எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்..­. நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு... தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது... தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்..... உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார். அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்... அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்.. உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்... பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும். .. குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்... "இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் (ரலி) — (ஹில் புல் புளுள்)

Sunday, October 26, 2014

இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி


இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி
ஒருவர் மற்றவருக்கு உதவி ஒத்தாசையாக இருக்கும் விதத்திலேயே இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கின்றது.அதனால் தேடிச் சென்று பிறருக்கு உதவுமாறு மதங்களெல்லாம் அதற்கு உட்சாகமூட்டுகின்றது. அதனடிப்படையில் ஒவ்வொருவரும் பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்யவே செய்கின்றனர்.இதில் சிலர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும் மற்றும் சிலர் பாரிய பிரச்சனைகளுக்கு உதவுபவர்களாகவும்,வேறு சிலர் நிகழவிருக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வு செய்து அதற்கான முன் ஏட்பாட்டையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை முழுமையாக படிக்க.......
இஸ்லாம் சுவன சுக போக வாழ்கைக்கான வழி காட்டி

Friday, October 24, 2014

முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்

புனித முஹர்றம் 10ம் நாள் ஆஷூறா தினத்தில் உலகில் அற்புதங்கள் அனந்தம். அவற்றுல் சிலதை இங்கு தருகின்றோம்.

    1. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “தவ்பஹ்“இன்றுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    2. இன்றுதான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.இதில் கப்பலில் ஏறியவர்களும்,ஏற்றப்பட்ட மிருகங்கள்,பறவைகள் அனைத்தயும் தவிர அனைத்தும் அழிக்கப்பட்டன.150 தினங்கள் தொடராக பெரு மழை பொழிந்து உலகெங்கும் வெள்ளப்பிரளம் ஏட்பட்து.
    3. இன்றுதான் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்
    4. இன்றுதான் சர்வதிகாரி நிம்றூதால் தீங்கிடங்கில் எறியப்பட்ட நபி இப்றாஹீம் அலைஹிஸ்லாம் காப்பாற்றப்பட்டார்கள்
    5. இன்றுதான் நபி யுனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
    6. இன்றுதான் நபி ஐயுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துன்பம் நீங்கியது.
    7. நபி யுசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரிவால் தேய்ந்திருந்த பார்வை நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்தது.
    8. இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்ட நபி யுசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
    9. இன்றுதான் உலகம் படைக்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
    10. இன்றுதான் உலகில் முதன் முதலில் வானத்திலிருந்து மழை பெய்தது.


முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்

முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்

முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்

முஹர்றம் உணர்த்தும் தியாகங்களும் படிப்பினைகளும்



muharram

Thursday, October 23, 2014

ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆ என்றால் ஒன்று கூடுதல் என்று பொருளாகும். வெள்ளிக்கிழமை ளுஹர் வேளையில் ஜமாஅத்தாகத் தொழும் விஷேடத் தொழுகைக்கு ஜும்ஆத் தொழுகை என்று பெயர்.
ஜும்ஆத் தொழுகை மக்காவில் கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்களின் தொழுகை அங்கு குறைவாக இருந்தாலும், காபிர்களின் அச்சத்தினாலும் ஜும்ஆத் தொழுகை அங்கு நிறைவேற்றப்படவில்லை.
மதீனாவில் முஸ்லிம்களி்ன் தொகை அதிகமாக இருந்ததனாலும் பகிரங்கமாக இஸ்லாத்தின் கடமைகளை அங்கு செய்வதில் எதுவித அச்சமும் இல்லாததனாலும் நபியவர்களின் வேண்டுதலின் பிரகாரம் “நகீஉல் ஹழ்மான்“ என்ற கிராமத்தில் ஹளரத் அஸ்அத் இப்னு ஸுறாறா ரழியல்லாஹு அன்ஹு தலைமையில் முதன் முதலில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்பட்டது.
ஜும்ஆ நாளின் சிறப்பு
நாட்களின் நாயகம் வெள்ளிக்கிழமை ஆகும். கண்ணியம் பொருந்திய இந்நாள் இரு பெருநாட்களை விடவும் மேலானது என்றும் கூறப்படுகின்றது. இந்நாளில் பின்வரும் சிறப்புக்கள் உள்ளன.
* நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள்
* நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் பூமிக்கு இறக்கப்பட்டார்கள்
* நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தௌபா அங்கீகரிக்கப்பட்டது.
* இதே நாளில் வபாத்தானார்கள்.
* துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் இதில் உண்டு.
* மறுமையின் அழிவும் இந்நாளில்தான் ஏற்படும்.
* இந்நாளில் மரணிப்பவருக்கு கப்றில் கேள்வி கணக்கு இல்லை.
* நரகவாசிகளுக்கு இந்நாளில் வேதனை இலேசாக்கப்படும்.
ஜும்ஆத் தொழுகையின் நன்மைகள்
* முஸ்லிம்கள் இறையச்சத்துடன் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர்.
* முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதனால் பகை அகன்று நட்பு வளரும்.
* வசதி உள்ளவர் ஏழைகளுக்கு உதவும் வாய்ப்புக் கிடைக்கின்றது
* சிறியவர் பெரியவர்களைக் கண்ணியப்படுத்தவும் பெரியவர்களுக்கு சிறியவர்கள் இரக்கம் காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
* கதீபின் உபதேசத்தைக் கேட்டு இறையச்சத்தை வளர்க்க வாய்ப்பேற்படுகின்றது.
* ஜும்ஆ நாளில் துஆ அங்கீகரிக்கப்படும் ஒரு நேரம் உண்டு. அந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
* வெள்ளிக்கிழமை ஒன்று கூடுதல் நல்ல பண்புகளை வளர்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்கள்
* அதிகமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும்.
* திக்று, ஸலவாத்து அதிகம் ஓத வேண்டும்.
* அதிகமாக தௌபாச் செய்ய வேண்டும். துஆக்கள் கேட்க வேண்டும்.
* தர்மம் செய்ய வேண்டும்.
* பெற்றோர், ஸாலிஹீன்கள், உலமாக்கள், வலிமார்கள் உள்ளிட்டவர்களை ஸியாரத் செய்ய வேண்டும்.
ஜும்ஆ கடமையானோர்
பருவமடைந்த உள்ளூரில் தங்கியிருக்கும் (முகீம்) ஆண்கள்மீது கடமையாகும். பெண்கள், சிறுவர்களுக்கு ஜும்ஆக் கடமையில்லை.
ஜும்ஆவின் நிபந்தனைகள்
* ஜமாஅத்தாக நிறைவேற்றல் (தனித்து தொழ முடியாது) முதல் ரகாஅத் முழுவதும் ஜமாஅத் நிறைவேற்ற வேண்டும். இரண்டாம் ரக்அத்தில் றுகூவுக்குப் பின் வந்து சேருபவர் நான்கு ரக்அத் தொழ வேண்டும்.
* நாற்பது பேர் ஒன்று கூட வேண்டும். இவர்கள் சூறத்துல் பாத்திஹாவை தவறில்லாமல் திருத்தமாக ஓதக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
* ஊர் வாசிகளாகவும், ஆண்களாகவும் இருக்க வேண்டும்.
* குத்பா ஆரம்பத்திலிருந்து தொழுகை முடியும்வரை நாற்பது பேர் இருக்க வேண்டும்.
* ளுஹர் நேரத்தில் நடைபெற வேண்டும்.
* இரண்டு குத்பாக்களுக்கு பின்பு தொழுகை நடைபெற வேண்டும்.
* ஓர் ஊரில் ஒரு ஜும்ஆத்தான் நடக்க வேண்டும். இடநெருக்கடி, தெலை தூரம், அச்சம் இருந்தால் தேவைக்கேற்ப கூட்டலாம். பாடசாலை விடுதிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் ஜும்ஆக்கள் மேற்கூறியவைகளில் அடங்கவில்லை எனில் ஜும்ஆ நிறைவேறாது. சிறையிலுள்ளோர் வெளியில் செல்ல முடியாதிருப்பதால் அவர்கள் சிறையிலேயே ஜும்ஆ நடத்தலாம் என்று “பிங்யா“ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
* குறைந்தளவு எண்ணிக்கையைக் கொண்ட சிற்றூரில் சூறத்துல் பாத்திஹாவை திருத்தமுடன் ஓதத் தெரிந்தவர்கள் 40 பேர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஜும்ஆவுடன் ளுஹரும் தொழ வேண்டும்.
* பல சிற்றூர்கள் அடுத்தடுத்து மிக நெருக்கமாகப் பக்கத்திலிருந்தாலும் வழக்கத்தில் தனித்தனியான ஊர் என்று சொல்லப்படுமானால் அப்படியான ஒவ்வொரு ஊரிலும் ஜும்ஆ நடத்தலாம் என்று “இஆனா“ என்ற நூலில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.
* ஒருவனுக்கு இரு ஊர்களில் மனைவி மக்கள் சமமாக இருந்தால் அவர் ஜும்ஆ நேரம் இருக்கும் ஊராகக் கணிக்கப்படுவார். சொத்துக்கள் வியாபாரம் ஓர் ஊரிலும் குடும்பம் வேறு ஊரிலும் இருந்தால் குடும்பங்கள் இருக்கும் ஊரையே கணிக்கப்படும்.
குத்பாக்களின் பர்ளுகள்
01. அல்ஹம்துலில்லாஹ் என்று ஆரம்பித்தல் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெயர் கூறி ஸலவாத் மொழிய வேண்டும்.
02. நபியவர்களின் பெயரில் சொல்லப்படும் ஸலவாத்தில் அண்ணலாரின் பெயர் கூறப்பட வேண்டும். தவிர ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்று கூறல் ஸலவாத் கூறுவது செல்லுபடியாகாது. தற்காலத்தில் அநேகமான கதீப்மார்கள் இதனைக் கவனத்தில் கொள்ளாமல் “ஸல்லல்லாஹு அலைஹி“ என்றே ஸலவாத் கூறுகின்றனர். உலமாக்களும் ஏனையோர்களும் இது விடயத்தில் செய்யும் மௌனத்ததால் குத்பா பாழாகி விடுகின்றது.
03. ஊசிக்கும் பிதக்குவல்லாஹி என்று வருகை தந்தோருக்கும் தக்வாவைக் கொண்டு வஸிய்யத்து செய்ய வேண்டும்.
(இம்மூன்றும் இரண்டு குத்தபாக்களிலும் இடம்பெற வேண்டும்)
04. இரு குத்பாக்களில் ஒன்றில் கருத்துப் பொதிந்த ஒரு ஆயத்தை ஓதல்.
05. இரண்டாம் குத்பாவில் முஃமின்களுக்காக இஸ்திஹ்பார் பாவ மன்னிப்பு தேடல்.
இரு குத்பாக்களின் நிபந்தனைகள்
01. நாற்பது பேர் குத்பாவை செவிமடுத்தல்.
02. குத்பா அறபு மொழியில் அமைதல்.
03. நின்று கொண்டு குத்பா ஓதல்.
04. சிறு, பெருந் தொடக்குகளையும், நஜீஸ்களையும் விட்டும் தூய்மையாக இருத்தல்.
05. மானத்தை மறைத்தல்.
06. இரு குத்பாக்களுக்கிடையில் சிறிது உட்காருதல்.
07. குத்பாக்களின் இரு பர்ளுகளுக்கிடையிலும் குத்பாவுக்கும், தொழுகைக்கும் இடையிலும் தொடர்ச்சியைப் பேணுதல்.
குத்பாவின் உபதேசம் நீண்டிருந்தாலும் தொடர்ச்சி முறியாது. ஆனால், உபதேசம் செய்யாமல் தொடர்ச்சி நீளுவது தொடர்ச்சியை முறிக்கும்.
பர்ளுகளை மட்டும் சுருக்கமாக ஓதி இரண்டு ரக்அத் தொழும் நேரம் தொடர்ச்சியுடன் அதிகமான நேரமாகும். அதனால்தான், இரு குத்பாக்களுக்கிடையில் சுருக்கமாக அமர்வது, குத்பா முடிந்ததும் இகாமத் சொன்னதும் விரைவாக தொழுகையை ஆரம்பிப்பதும் கடமையாகும்.
சிலர் குத்பா முடிந்து இகாமத் கூறப்பட்ட பின்பு உபதேசிப்பது விளம்பரம் செய்வது வரிசைகளை சீர்செய்வது போன்றவற்றில் அதிக நேரத்தை கழித்தால் குத்பா வீணாகிவிடக் கூடிய ஆபத்து உண்டு. கதீபும் ஏனையவர்களும் இது விடயத்தில் கவனம் கொள்ளல் வேண்டும்.
குத்பாக்களின் சுன்னத்துக்கள்
01. குத்பாவின் பர்ளுகளை ஒழுங்கு முறைப்படி செய்தல்.
02. ஆட்சியாளர்கள், முஸ்லிம் படைகள், குடிமக்கள் உள்ளிட்டோர்களுக்கு வெற்றியும் நலமும் வேண்டியும் பிரார்த்திப்பது.
03. கதீப் பள்ளிக்குள் நுழையும்போது வாசலிலிருப்போருக்கும் மிம்பரில் ஏறும் முன் இருப்போருக்கும் மிம்பரில் ஏறிய பின் பள்ளியில் கூடி இருப்போருக்கும் ஸலாம் கூறல்.
04. முஅத்தி்ன் கதீபுக்கு முன்னாள் வலப்பக்கமாக நின்று கொண்டு அதான் ஒலித்தல்.
05. கதீப், ஒரு தடி அல்லது வாள் போன்றதை இடது கையால் ஊன்றியவராக அங்குமிங்கும் திரும்பாது ஆடாது, அசையாது கம்பீர தோற்றத்துடன் பவ்வியமாகவும் பக்தியுடனும் குத்பா ஓதுதல்.
06. இரு குத்பாக்களுக்கிடையில் “குல்குவல்லாஹு“ சூறா ஓதும் அளவு உட்காருதல்.
07. குத்பாவை அழகாகவும், தெளிவாகவும் மரியாதை மிகுந்த நல்வார்த்தைகளைக் கொண்டும் அமைத்துக் கொள்ளல்.
08. குத்பாவை இஸ்திஃபாரைக் கொண்டு நிறைவு செய்தல்.
09. கதீப் மிம்பரில் ஏறும் முன், முஅத்தின் ஜமாஅத்தினரை நோக்கி இமாம் குத்பா ஓதும்போது அமைதியாக இருக்குமாறு கூறுவது, இமாம் குத்பா ஓதும்போது உனது சகோதரனைப் பார்த்து பேசாதீர்! என்று கூறினாலும் குத்பாவின் பலனை இழந்துவிடுவீர்! என்ற ஹதீதை ஓதுதல்.
10. கதீப் குத்பா ஓதும்போது கதீபைப் பார்ப்பது.
11. ஜும்ஆத் தொழுகையில் சூறத்துல் ஜும்ஆ அல்லது சூறத்துல் முனாபிக்கீன் அல்லது சூறத்துல் அஃலா, சூறத்துல் ஙாஸியா போன்றவற்றை ஓதுதல்.
ஜும்ஆத் தொழுகைக்குப் பின்
தொழுது முடிந்து காலைப் பிரிக்க முன் சூறத்துல் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஆகியவற்றை ஏழு முறை ஓதினால் அவரது குற்றங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும், ஈமான் கொண்டோர் எண்ணிக்கையளவு நன்மை வழங்கப்படும் என்றும் மறு ஜும்ஆ வரும்வரை எதுவித தீயவைகளும் அணுகாது என்றும் தீனுக்கும், துன்யாவுக்கும் பாதுகாப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், “அல்லாஹும் யாஹைய் யாஹமீது, யா முப்திஉ, யா முஈது, யா ரஹீமு, யாவதூத் அங்னினி, பிஹலாலிக, அன்ஹறாமிக வபிதாஅதிக அன்மஃ ஸியதிக வபிபழ்லிக அம்மன் சிவாக“ என்ற துஆவை ஜும்ஆ நாளில் 70 விடுத்தம் ஒதினால் மறு ஜும்ஆ வருமுன் செல்வம் அவனைத் தேடி வரும்.
மேற்படி துஆவை கணக்கற்ற முறையில் ஒருவர் ஓதுவதை வழக்கமாக்கி்க் கொண்டால் அவர் அறியாத புறத்திலிருந்தும் செல்வம் அவரைத் தேடி வரும் என்று இமாம் அபூதாலிப் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
இலாஹி வஸ்து லில் பிர்தௌஸி
அஹ்லா வலா அக்வா அலா நாரில் ஜஹீமி
ஃபஹப்லி ஸல்லத்தி வஃபிர்துனூபி
ஃபஇன்னா ஃஙாபிறுத் தன்பில் அழீமி
என்ற கவிதையை ஜும்ஆவுக்குப் பின் ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்வாராயின் நிச்சயம் அவர் இஸ்லாத்திலேயே மரணி்ப்பார் என்று குத்புர் ரப்பானி இமாம் அப்துல் வஹாபுஸ் ஸஃறானனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ஆதாரம் : யஃங்யா, பக்கம் - 84
ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆத் தொழுகை

குனூத் - ஒரு விளக்கம்

இன்று நவீன வாதிகளால் பிரச்சினையாக்கப்பட்டுள்ள விஷயங்களில் குனூத்தும் ஒன்று.

ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னத். ஆனால் குனூத்திற்கு ஹதீஸ்களில் ஆதாரமில்லை என அங்கலாய்கின்றனர். ஹதீஸ்களை மெத்தப்படித்துக் தேர்ந்த இந்த மேதைகள்(?)
ஹதீஸ்களில் தராதரங்களைப் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத அப்பாவிகள் நபிமொழிகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றுவிட்டவர்களைப் போன்று பசப்பு வார்த்தைகளால் பாமர மக்களின் உள்ளத்தில் விஷ வித்துக்களை தூவி அவர்களை குழப்பி அற்ப சுகம் காணுகின்றனர்.

சவூதியின் சாக்கடைக் கொள்கைகளை பிரசாரம் புரிந்து தேவைக்கதிகமாக சொத்து சேர்த்து விட்டாயே! இன்னும் ஏனிந்த குழப்பங்களைச் செய்கின்றாய்? என வஹ்ஹாபிஸ கைக்கூலியிடம் நண்பரொருவர் தன் வேதனையை வெளிப்படுத்தியபோது அந்த ஏஜென்ட் எனக்குக் கூலி கிடைக்கிறது. அதற்கான வேலையைச் செய்கிறேன். மக்கள் குழம்பினால் அதற்கு நானா பொறுப்பு? எனப் பதில் கூறினாராம்.

பாமரர்கள்தான் இவர்களின் வெளி வேஷத்தில் அறிவை அடகு வைத்திருக்கிறார்கள் என்றால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் போதிக்கும் மத்ரஸாக்களில் கற்றுத்தேறி பட்டம் பெற்ற அக்கொள்கையை தம் உயிர் மூச்சாகக் கொண்டு செயற்பட்ட அக்கொள்கையினை பிரசாரம் புரிந்த சிலதுகள் கூட அரபு நாட்டுச் சுகங்களில் புரண்டு தம் கொள்கையை அடகு வைக்கத் துணிகின்றனரென்றால் அவர்களை என்னவென்பது? எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் - நேர்வழியை மீண்டும் தந்திட துஆச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிகச் சிறந்த நபிமொழிக் கலை வல்லுனர் மட்டுமல்ல! நபி மொழிகளிலிருந்து பிக்ஹ் சட்டங்களை உருவாக்குவதற்கு ஒரு அடிப்படை விதியை ஏற்படுத்தி அறிவற்றவர்களும் அனாமதேயங்களும் மார்க்கத்தில் புகுந்து தம் கை வரிசையைக் காட்ட முடியாது வேலியிட்டுத்தடுத்த சட்டமேதை.

சட்டமேதை என்று கூறினாலே இது இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களையே சுட்டிக் காட்டுகிறது. இஸ்லாமிய உலகம் போற்றும் அத்தகு மேதையவர்கள் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் சுபுஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது சுன்னத் என்ற விதியை அமைக்க அதனை ஷாபிஈயாக்கள் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
ஆனால் நேற்றுப்பெய்த மழையில் இன்று முளைத்த இந்தக் காளான்கள் குனூத் ஓத நபி மொழிகளில் ஆதாரமில்லை என கூப்பாடு போடுகின்றன.
எனவே குனூத் ஓதுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரமுண்டா? என்பதைப் பார்ப்போம்.


1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர் : அல் பர்ராஉ (ரழி)
நூல் : அபூதாவூத்


2. அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஸுப்ஹுத் தொழுகையில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குனூத் ஓதினார்களா? என வினவப்பட்டபோது ஆம் எனப் பதிலிறுத்தனர். ருகூஉக்கு முன்னரா? பின்னரா? என வினவ ருகூஉக்குப் பின்னர் என விடை பகர்ந்தனர்.
நூல் : அபூதாவூத் பாகம் 1, பக்கம் 313
3. ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் (வபாத்) வரை சுப்ஹில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தாரகுத்னி பாகம் 2, பக்கம் 39-41
முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3, பக்கம் 110
அத்காறுந் நவவி : பக்கம் 57


4. அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு, உமர் ரழியல்லாஹு அன்ஹு இருவரும் சுப்ஹுத் தொழுகையில் ருகூஉக்குப் பின்னர் குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ உத்மான்
நூல் : தாரகுத்னி, பைஹகீ
5. அல் அவாம் இப்னு ஹம்ஸா கூறுகின்றார்கள்.
ஸுப்ஹின் குனூத் பற்றி அபூ உத்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் அது ருகூஉக்குப் பின்னர் என்றார். யாரிடமிருந்து இதனைத் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டபொழுது அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு, உதுமான் ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரிடமிருந்து என்று பதில் கூறினார்.
அறிவிப்பாளர் : யஹ்யா இப்னு சயீது
நூல் : காமில் இப்னு அதிய்யி

6. நான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஊரிலும், பிரயாணத்திலும் தொழுதிருக்கிறேன். அன்னார் ஸுப்ஹில் ருகூஉக்குப் பின் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். மற்ற தொழுகைகளில் குனூத் ஓதுவதில்லை.
அறிவிப்பாளர் : அல் அஸ்வத்
நூல் : பைஹகீ
7. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் ருகூஉக்குப் பின் இரு கரங்களையும் உயர்த்தி சப்தமிட்டு துஆ கொண்டு குனூத் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் : அபூராபி
நூல் : பைஹகீ
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அன்புத் தோழர்களும் குனூத் ஓதினர் என்பதற்கான ஹதீஸ்களே இவை.
ஹதீஸ்களை கரைத்துக் குடித்துவிட்டதாக மனப்பால் குடிக்கும் நவீன (?) வீணர்களே! இந்த ஹதீஸ்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகின்றீர்கள்?.

நன்றி : புஷ்றா - இதழ் 5 ஜூலை – ஆகஸ்ட் 2006

குனூத் - ஒரு விளக்கம்

குனூத் - ஒரு விளக்கம்